சனி, 24 டிசம்பர், 2011

முடிவு

இங்கு உள்ள அனைத்தும் நிலை இல்லாதது.  ஏதோ ஒன்று முடிந்தால் இன்னொன்று ஆரம்பிக்கும்.  முதலிலும் துன்பம், இரண்டாவதிலும் இன்பமில்லை.  நம் வாழ்வின் முதல், இடை மற்றும்  கடைசி எதிலும் இம்பமில்லை.  பக்தி,  பக்தி அது என்ன?  கோபம் வரும் போதோ அல்லது எதின் மேலாவது காமம் வரும் போதோ நம்மை கட்டு படுத்த முடிகிறதா.  அப்படி முடிந்தால் அவனிடம் பக்தி சிறிதாவது இருக்கும்.  கட்டு படுத்த முடியாதவன்.  பக்தி என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.  எனக்கு தெரிந்தது சில ஆனால் கடவுளுக்கு தெரிந்தது பல.  கல்லில் இடித்து கொண்டால் கட்டாயம் அந்த வலியை அனுபவித்தே ஆக வேண்டும்.  அதை போல் நாமும் முன் மற்றும் இந்த ஜென்மத்தில் செய்த நன்மை தீமைகளை  அனுபவித்தே ஆக வேண்டும்.  நன்மை என்றால் என்ன என்று ஏன் அறிந்து கொள்ள கூடாது.   கல்லில் இடித்து கொண்ட வலியை நில் என்றால் நின்றுவிடுமா, அதேபோல் நாம் முன் மற்றும் இந்த ஜென்மத்தில் செய்த வினையை அனுபவித்தே ஆக வேண்டும். 
நான் என்ற அகங்காரம் தீர வேண்டும்.  அன்றிலிருந்து இன்று வரை நாம் நான் என்ற கொடூர அரக்கனிடம் சிக்கி தவிக்கிறோம்.  நான் என்பது நம்மை விட்டு அகலும் போது நமக்குள் ஞானம் பிறக்கிறது.  ஞானம் பிறந்தால் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது, ஒளி வரும் போது நான் என்ற இருள் அகலுகிறது.  நான் என்பதற்கே உலகில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  மனைவி கேட்ப்பாள் சம்பாதிதுப்போட முடியல நீ மனிதன் தானா,  அப்பொழுது நான் சம்பாதிக்க வேண்டும் என்று பல பக்கம் ஓடினாலும் முடியாது.    நாம் சம்பாதிக்க முடியாது என்றும் ஓட முடியாது.  காரணம் ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது அது தான் கடவுள்.  அது தான் வாழ்வின் ஒளி.